மனைவியின் அந்த செயல் - திடீரென 10 வருட கோமாவில் இருந்து மீண்ட கணவன்!
மனைவியின் விடா முயற்சியால் கணவர் கோமாவில் இருந்து மீண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோமா நிலை
சீனாவை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது மயங்கி விழுந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை.
பல ஆண்டுகள் கடந்தும் அவருக்கு நினைவு திரும்பாததால், அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் வேதனையில் இருந்தனர். ஆனாலும் தனது கணவர் மீது கொண்ட அன்பால் சன்ஹாங்சியா மனம் தளரவில்லை. அவர் மீண்டு வருவார் என்று உறுதியாக நம்பினார்.
மீண்ட கணவர்
தொடர்ந்து வீட்டில் தனது கணவரை மிகவும் அன்புடன் கவனித்து வந்தார். இதன் பயனாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் படுக்கையில் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறுகிறார். அப்போது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இதனை பார்த்த பலரும் "இதுதான் உண்மையான காதல்" என பதிவிட்டு வருகின்றனர்.