சித்த வைத்தியரே நீங்களா..? முதல்முறை ஓராங்குட்டான் செய்த செயல் - அதிர்ந்த ஆய்வாளர்கள்!
தங்களது காயங்களுக்கு விலங்குகள் எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கிறது என்பதை முதல்முறையாக விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
ஒராங்குட்டான்
இந்தோனேசியாவின் கணன் லீசர் தேசிய பூங்காவில் ராகூஷ் என்ற 35 வயதான ஒராங்குட்டான் வசித்து வருகிறது. இந்த ஓராங்குட்டானின் கண்ணுக்கு கீழே ஒரு காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அது தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தும் மருத்துவ தாவரத்தின் இலைகளை மென்று அதன் சாற்றைக் காயத்தின் மீது தடவியுள்ளது. பின்னர் மென்ற தாவரத்தை காயத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளது.
விலங்கு மருத்துவர்
இதனையடுத்து ஒரு மாதத்திற்குள் அந்த காயம் குணமடைந்துள்ளது. இதன் மூலம் உலகத்தின் முதல் விலங்கு மருத்துவர் என்ற பெருமையையும் ராகூஷ் என்ற ஒராங்குட்டான் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழக பேராசிரியரான மைக்கேல் ஹவ் மேன் கூறுகையில் "விலங்கு ஒன்று தனது காயத்திற்கு மூலிகைகளை பயன்படுத்துவது குறித்து தெரியவந்தது இதுவே முதல் முறை" என்றார். மேலும், தங்கள் காயங்களுக்கு விலங்குகள் எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றன என்பதை முதல்முறையாக விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தியுள்ளனர்.