சீன கரடிகள் உண்மையானவை; வேடமிட்ட மனிதன் கிடையாது - உறுதிப்படுத்திய இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா!
ஹாங்ஜோ மிருகக்காட்சி சாலையில் உள்ளதைப் போன்ற கரடியின் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பாரடைஸ் வனவிலங்கு பூங்கா.
மனிதனைப் போன்ற கரடிகள் சர்ச்சை
அண்மையில் கிழக்கு சீனாவின் 'ஹாங்சோ உயிரியல் பூங்கா' அங்குள்ள மனிதனைப் போன்ற சன் என்ற கரடிககளின் வீடியோ இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் இது உண்மையான கரடிகள் அல்ல கரடிகளைப் போன்ற வேடமிட்ட மனிதர்கள் என்று கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ கடும் விமர்சனங்களையும், சந்தேகங்களையும் எதிர் கொண்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஹாங்சோ உயிரியல் பூங்கா "அவைகள் உண்மையான கரடிகள் தான் எனவும், கரடியின் வேடமிட்டிருந்தால் அந்த மனிதர்கள் வெயிலின் வெப்பம் தாங்காமல் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து விடுவார்கள் என்றும் பதிவிட்டனர்.
தெளிவு படுத்திய பாரடைஸ் வனவிலங்கு பூங்கா
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள 'பாரடைஸ் வனவிலங்கு பூங்கா' ஹாங்ஜோ மிருகக்காட்சி சாலையில் உள்ளதைப் போன்ற கரடியின் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் "கைரா ஒரு சன் கரடி என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.