பரிசாக வந்த மீன்...ருசி பார்த்த நபர் - 35 நாள் கோமா...இப்போ மரணம் - மீனில் என்ன இருந்தது தெரியுமா..?
தனக்கு பரிசாக வழங்கப்பட்ட விஷம் கலந்த Puffer வகை மீனை சமைத்து சாப்பிட்ட நபர் ஒருவர் 35 நாட்களுக்குப் பிறகு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு உயிரிழந்ததாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிசு
பிரேசில் நாட்டிலுள்ள Espirito Santa மாகாணத்தில் Aracruz என்ற இடத்தில் வசித்து வருபவர் 46 வயதான Magno Sergio Gomes என்பவர். இவருக்கு அவரது நண்பர் Puffer வகை அதாவது தமிழில் கோளமீன் என்ற வகை மீனை பரிசளித்துள்ளார்.
ஜப்பான் கடல் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இவ்வகை மீன் ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமான மீன் உணவாகவும் இருக்கின்றது.
சமைத்து சாப்பிட்டு..
பரிசாக வந்த மீனை சமைத்து சாப்பிட Magno Sergio Gomes மற்றும் அவரது நண்பர் இருவரும் ஈடுபட்டுள்ளனர். மீன் மீது அதிகளவில் முள் இருக்கும் நிலையில், அதனை நீக்கிய அவர்கள், அந்த மீனை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட சில மணி நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Magno Sergio Gomes கோமா நிலைக்கு சென்றுள்ளார். இது நடந்தது 35 நாட்களுக்கு முன்பு. கோமா நிலையில் இருந்த அவர், அதன் பிறகு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விஷம்
அவருடன் மீனை உண்ட அவரது நண்பர் மிகவும் மோசமான நிலையில், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மீன் சாப்பிட்டு எப்படி உயிரிழந்தார்கள் என்ற சந்தேகம் வந்தால், இந்த puffer வகை மீன் என்பது மிகவும் கொடிய விஷம் கொண்ட மீனாகும்.
தன்னை பிற கடல் இனங்களின் இருந்து பாதுகாத்துக்கொள்ள மீனின் கல்லீரல் சக்திவாய்ந்த விஷம் உண்டாகிறது. இந்த விஷம் சயனைடை விட 1,000 மடங்குக்கும் அதிகமான கொடியது என்றும் இதற்கு மாற்று மருந்து இல்லை என்றும் கூறப்படுகிறது.
மிகவும் ட்ரைனிங் பெற்ற ஜப்பான் நாட்டை சேர்ந்த சில சமையல் கலை வல்லுநர்களுக்கு மட்டுமே இந்த மீனை நேர்த்தியாக சமைக்கும் நுட்பம் தெரியும் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.