15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதி - மருந்து செலுத்தி மரண தண்டனை!

China World
By Jiyath Feb 02, 2024 06:00 AM GMT
Report

15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தம்பதி 

சீனாவை சேர்ந்த தம்பதி ஜாங் போ- சென் மெய்லின். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் 1 வயதில் ஒரு மகன் இருந்தனர். இதற்கிடையில் கடந்த 2020-ம் ஆண்டு இந்த தம்பதி விவகாரத்து செய்துகொண்டனர்.

15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதி - மருந்து செலுத்தி மரண தண்டனை! | Children Thrown From 15Th Floor China

இதனையடுத்து யே செங்சென் என்ற பெண்ணுடன் ஜாங் போவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது பின்னரே யே செங்சென்னுக்கு தெரியவந்துள்ளது.

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி!

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை; உதவிய 4-ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி!

மரண தண்டனை 

இந்த குழந்தைகள் தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் என்று நினைத்த செங்சென், அவர்களை கொல்ல வேண்டும் என ஜாங்கை கட்டாயப்படுத்தியுள்ளார்.

15-வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதி - மருந்து செலுத்தி மரண தண்டனை! | Children Thrown From 15Th Floor China

பின்னர் அவர்கள் வசித்த குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து ஜன்னல் வழியே குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குழந்தைக்கு இருவரும் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஜாங் மற்றும் செங்சென்னுக்கு மரண தண்டனை வழங்கி சீன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த புதன்கிழமை அவர்களுக்கு ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.