'பார்த்தவுடனே டெலிட் செய்து விடுவேன்' பள்ளி மாணவியை மிரட்டிய நபர் - அடுத்து நடந்த சம்பவம்!

Tamil nadu Crime Karur
By Jiyath Jun 27, 2024 05:05 AM GMT
Report

பள்ளி மாணவியை ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆபாச வீடியோ

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27 வயது). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தாராபுரத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியுடன் (16 வயது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாறி வந்துள்ளனர். இதனிடையே சிறுமியை பேசி மயக்கிய விக்னேஷ், ஆபாச வீடியோவை எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். மேலும், பார்த்த உடனே வீடியோவை டெலிட் செய்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சிறுமி, தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார்.

கல்லூரி மாணவனுடன் மருமகள்; நேரில் பார்த்த மாமியார் - அடுத்து நடந்த சம்பவம்!

கல்லூரி மாணவனுடன் மருமகள்; நேரில் பார்த்த மாமியார் - அடுத்து நடந்த சம்பவம்!

வாலிபர் கைது 

இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டிய விக்னேஷ், தனியாக ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையென்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்துள்ளனர்.