இன்ஸ்டாகிராம் பழக்கம் - பள்ளி சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை!

Sexual harassment India Rajasthan Crime
By Jiyath Jun 04, 2024 07:58 AM GMT
Report

பள்ளி சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மார்ஃபிங் புகைப்படம்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான். இவர் இன்ஸ்டாகிராமில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நண்பராக பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பழக்கம் - பள்ளி சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை! | School Girl Sexual Harassment 2 Arrested

மேலும், அந்த புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி இர்ஃபானிடம் கொடுத்துள்ளார்.

மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்த புரோக்கர் - பலே மோசடி!

மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்த புரோக்கர் - பலே மோசடி!

இருவர் கைது 

அப்போது தனது நண்பருடன் சேர்ந்து அந்த சிறுமியை இர்ஃபான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பழக்கம் - பள்ளி சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை! | School Girl Sexual Harassment 2 Arrested

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இர்ஃபான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.