ஷாக்..பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் - இருவர் கைது!
மாணவியின் செல்போனில் ஆபாச படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆபாச படங்கள்
சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் செல்போன் எண்ணிற்கு திடீரென கடந்த வாரம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வந்துள்ளன.
தொடர்ந்து ஆபாச மெசேஜும் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதை பார்த்து பயந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அந்த செல்போனை வாங்கி சோதனையிட்டதில் அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளின் பாதுகாப்பு கருதி அவர் உடனடியாக மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இருவர் கைது
இதன் அடிப்படையில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஆபாசமாக வீடியோக்கள் அனுப்பிய எண், ராஜஸ்தானில் இருந்து வந்து சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் ரவி, கிரண்சிங் என்பது என்று தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும், சிறுமியின் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை திருடி வடமாநில இளைஞர்கள் இருவரும் தவறாக சித்தரித்து வீடியோ அனுப்பியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.