உன்னோட அந்த வீடியோ யூடியூப்பில்...இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர்?

Youtube Tamil nadu Chennai Crime Thiruvarur
By Swetha Jun 03, 2024 10:40 AM GMT
Report

நிர்வாண வீடியோ இருப்பதாக கூறி ஒருவர் பெண்ணிடம் பணம் பறித்தது அதிர்ச்சசி அளித்துள்ளது.

இளம்பெண் வீடியோ

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இந்த 23 வயதுடைய இளம்பெண். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் என்று ஒருவர் அழைத்து பேசியுள்ளார்.

உன்னோட அந்த வீடியோ யூடியூப்பில்...இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர்? | Man Threatended Young Woman With False Information

அதில் அவர், அந்த இளம்பெண்ணிடம் உங்களுடைய ஆபாச வீடியோ யூடியூப்பில் இருக்கிறது. ரூ.9 ஆயிரம் பணம் கொடுத்தால் அந்த வீடியோவை நீக்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பதறிய இளம்பெண் சப்-இன்ஸ்பெக்டர் என்று பேசியவரின் 'கூகுள் பே' எண்ணுக்கு ரூ.6 ஆயிரத்து 500 பணம் அனுப்பி உள்ளார்.

ரூ.215கோடி பணம் பறித்த வழக்கு - குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகை ஜாக்குலின்!

ரூ.215கோடி பணம் பறித்த வழக்கு - குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகை ஜாக்குலின்!

மிரட்டிய  இன்ஸ்பெக்டர்?

அதோடு அந்த நபர் அந்த பெண் தந்தையின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம், அவரது மகளை பற்றி தவறாக கூறி, மகளின் நிர்வாண 'வீடியோ' யூடியூப்பில் இருக்கிறது. இந்த வீடியோவை நீக்குவதற்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

உன்னோட அந்த வீடியோ யூடியூப்பில்...இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர்? | Man Threatended Young Woman With False Information

இது தொடர்பாக அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மிரட்டியதை குறித்து புகார் அளித்தார். பெண் குறிப்பிட்ட பெயரில் யாரும் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், இந்த இளம்பெண்ணிடம் யாரோ மர்ம நபர் ஒருவர் நாடகமாடியதும் தெரியவந்தது.

அதாவது, அந்த மர்ம நபர் பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் போல் பேசி, நிர்வாண படம் இருப்பதாக பொய்யான தகவலை சொல்லி மிரட்டி பணம் பறித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.