கூரியர் முதல் CBI வரை: பெண் வழக்கறிஞரின் நிர்வாண வீடியோ - ரூ.14 லட்சம் பறிப்பு!
பெண் வழக்கறிஞர் ஒருவரை மிரட்டி ரூ.14 லட்சம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வழக்கறிஞர்
பெங்களூரைச் சேர்ந்த 29 வயது பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் "உங்களது பெயரில் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பி வந்துள்ளது.
அந்த பார்சலில் 5 பாஸ்போர்ட்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களை அழைத்து பேசுவார்கள்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு வந்த அழைப்பில், மும்பை போலீசார் என கூறி ஒருவர் பேசியுள்ளார். அவர் "இந்த வழக்கை சிபிஐ மற்றும் சுங்கத்துறை விசாரணைக்கு மாறியுள்ளதாக" தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகார எனக்கூறி மற்றோருவர் அழைத்துள்ளார்.
பணம் பறிப்பு
அவர் "இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், பிரபல கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருப்பதால், தீவிரமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரி என கூறி தொடர்பு கொண்ட மற்றொரு நபர், போதைப்பொருள் சோதனை நடத்தவேண்டும் என்று கூறி அந்த பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும், உங்கள் குடும்பத்தை கைது செய்துவிடுவதாகவும் மிரட்டி மர்மநபர்கள் ரூ.14.5 லட்சம் வரை பணம் பிரித்துள்ளனர்.
அப்போது தான் மும்பை போலீஸ், சிபிஐ, சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி மர்மநபர்கள் தன்னை மிரட்டி பணம் பரித்த்துள்ளது அந்த பெண் வழக்கறிஞருக்கு தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.