உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண் - நேரில் வீட்டிற்கு சென்று பார்த்து அதிர்ந்த என்ஜினீயர்!
இளம்பெண் ஆன்லைன் மூலம் பழகி பலரிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
ஆன்லைன் பழக்கம்
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(37). சாப்ட்வர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இளம்பெண் ஒருவரிடம் ஆன்லைன் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த பெண் இவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து பழகி வந்துள்ளனர். வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி நம்பவும் வைத்துள்ளார். இந்நிலையில், இளம்பெண் விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இளம்பெண் ஸ்கெட்ச்
இவரும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் இரண்டு ஆண்களுடன் சேர்ந்து இவரை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி செயினை பறித்துள்ளனர். மேலும், ரூ.15 கேட்டு மிரட்டி வீட்டிற்கு சென்று அனுப்புமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
இவர் அங்குள்ள காவல்நிலையத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளார். உடனே போலீஸார், அங்கு இருந்த இளம்பெண்ணையும், அவருடன் இருந்த அவரது நண்பர்கள் ஏழுமலை மற்றும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் ஆகியோரையும் மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை மீட்டு அவர்களை கைது செய்து விசாரித்ததில் இதே போல் பலரிடம் பலகி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.