கடல் கடந்த காதல்: ஆசையாய் வந்த காதலியின் உறுப்புகளை திருடி கடலில் வீசிய இளைஞர்!
காதலியை வெட்டி இளைஞர் உடல் உறுப்புகளை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆன்லைன் காதல்
பெரு, ஹுவாச்சோ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலத்தின் பகுதிகள் கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவைகளை கைப்பற்றி தடயவியல் நிருபனர்களின் உதவியோடு ஆதாரங்களை சேகரித்தனர்.
அதில், மெக்சிகோவைச் சேர்ந்த பிளாங்கா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன்பு பெருவுக்கு வந்ததும் அதன் பிறகு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் பெருவைச் சேர்ந்த ஜுவான் பாப்லோ ஜீசஸ் (37) என்ற இளைஞரை சமூக வலைத்தளம் மூலம் காதலித்துள்ளார்.
பரிதாபம்
அவரது கடைசி ட்வீட்டை வைத்து இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அதனையடுத்து பிளாங்காவின் காதலன் இருக்கும் இடத்தை அறிந்து அவரி கைது செய்தனர். விசாரணையில், ஆன்லைன் காதலனை சந்திக்க மெக்சிகோவில் இருந்து 5 கிலோ மீட்டர் பயணித்து வந்த
பிளாங்காவை வெட்டி கொலை செய்துவிட்டு உடல் உறுப்புகளை திருடி எஞ்சிய பாகங்களை ஹுவாச்சோ கடலில் வீசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.