தொடரும் கொடூரம்: காதலியை வெட்டி சாக்கடையில் வீசிய நபர் - பகீர்!
காதலியை வெட்டி நபர் சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
வங்காளத் தேசத்தைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது மனைவியுடன் கோபர்சக்கா சதுக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் அபுபக்கருக்கு திருமணம் நடந்தது ரானிக்கு தெரியாமல் இருந்துள்ளது.
மனைவி வேலைக்கு செல்லும் நேரத்தில் இருவரும் சந்தித்து வந்துள்ளனர். தொடர்ந்து அபுபக்கருக்கு, மனைவி இருப்பது ரானிக்கு தெரியவந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடந்தவர், ராணியின் கை, கால்களை வெட்டி தலையையும் சேர்த்து பிளாஸ்டிக் பையில் போட்டு, சாக்கடையில் வீசி சென்றுள்ளார்.
நடந்தது என்ன?
அதனையடுத்து உடனே போலீஸார் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து, வங்காளதேச இந்துக்களுக்கான குரல் என்ற அமைப்பு தனது டிவிட்டர் பதிவில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் நாவ்காவன் மாவட்ட நீதிபதி ஹசன் மஹ்முதுல் இஸ்லாம், தொடர்ந்து இந்துக்களை கொச்சைப்படுத்தி வருவதாகவும், ரங்பூரில் காளி கோயிலில் காளி சிலையை கிளர்ச்சியாளர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.