கல்யாணம் பண்ணிக்கோ...கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்ற காதலன்!

Attempted Murder Pregnancy Sexual harassment Crime
By Sumathi Sep 30, 2022 08:01 AM GMT
Report

கர்ப்பமாக இருந்த காதலியை, காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தகராறு 

ஜார்க்கண்ட், மேற்கு சிங்பம், ஹல்டியாவைச் சேர்ந்தவர் 21 வயதான இளம்பெண். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இதில், அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார்.

கல்யாணம் பண்ணிக்கோ...கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்ற காதலன்! | Pregnant Woman Strangled To Death By Lover

அதனைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்யுமாறு காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், காதலியை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காதலி, திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

கர்ப்பிணி கொலை

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், கர்ப்பினியை அடித்தேக் கொன்றுள்ளார். அதனையடுத்து அவரே போலீசில் சரணடைந்துள்ளார்.

கல்யாணம் பண்ணிக்கோ...கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்ற காதலன்! | Pregnant Woman Strangled To Death By Lover

அவரை கைது செய்த போலீசார் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.