கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரம் - பெண்ணை நடுரோட்டில் உயிரோடு எரித்த காதலன்!
பெண்ணை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்
கேரளா, திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் பிரவியா(31). இவர் பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் பட்டாம்பி நோக்கி சென்று கொண்டிருந்தார். கொடுமுண்டா என்ற இடத்தில் சென்ற போது, ஒருவர் பிரவியாவை தடுத்து நிறுத்தி, கத்தியால் குத்தி கீழே தள்ளியுள்ளார்.
தொடர்ந்து, கேனில் இருந்த பெட்ரோலை பிரவியா மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிரவியா உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
எரித்துக் கொலை
அதில், பிரவியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரும், ஆலூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (43) என்பவரும் ஒரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்து உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
சந்தோஸுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பின், வேலையில் இருந்து பிரவியா நின்று விட்டார். அதே சமயத்தில் கள்ளக்காதலை அறிந்த சந்தோசின் மனைவி, கணவரை பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து பிரவியாவுக்கு வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரத்தில் பிரவியாவை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில், தப்பியோடிய சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.