தனிமையில் இருந்த கள்ளக்காதல் ஜோடி; நேரில் பார்த்த சிறுவன் - இறுதியில் நேர்ந்த விபரீதம்!
தகாத உறவில் இருந்த ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
விருதுநகர், அழகாபுரியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருடைய மனைவி அமுதா(40). இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராம மூர்த்தி(40). இவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த வகையில், காட்டுப்பகுதியில் இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜோடி தற்கொலை
அப்போது, சிறுவன் ஒருவன் அதனை பார்த்துள்ளார். இதனால் பயந்த அமுதா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, காதலி இறந்த மன உளைச்சலில் ராம மூர்த்தியும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டதில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.