அண்ணியுடன் தகாத உறவில் இளைஞர்; உறவிற்கு மறுப்பு - மூதாட்டி கொடூர கொலை!
மூதாட்டி கொலை வழக்கில், காதலனுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
நாகையைச் சேர்ந்தவர் மூதாட்டி சரோஜா(67). இவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள மூதாட்டியின் இரண்டாவது மகன், தனது தாயார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்தனர்.
மேலும், மூதாட்டியின் வீட்டிற்கு ஒரு தம்பதி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தம்பிக்கோட்டை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து என்ற பெண் ஆகிய இருவரை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
மூதாட்டி கொலை
தொடர்ந்து நடத்திய விசாரணையில், மூதாட்டியின் தூரத்து உறவினரான காளிதாஸுக்கும், அவரின் அண்ணன் மனைவி வள்ளிமுத்துவுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது.
சம்பவத்தன்று, காளிதாஸும், வள்ளிமுத்துவும் பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாதவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காளிதாஸ், மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கியும், வள்ளிமுத்து மூதாட்டியின் காலை பிடித்துக் கொண்டும் கொன்றுள்ளனர்.
மேலும், மூதாட்டியின் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை திருடிக் கொண்டு அதிகாலையில் தப்பிச் சென்றுள்ளனர். அதனையடுத்து, அவர்களிடமிருந்து 1.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.