தம்பியுடன் கள்ளக்காதல் - தூங்கிய மனைவிக்கு கணவனால் நேர்ந்த பயங்கரம் - திக்.. திக்.. சம்பவம்
சென்னை, பிராட்வேவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (37). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி யாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று காலையில் யாஸ்மின் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் யாஸ்மினின் தாய் வந்து எழுப்பியுள்ளார். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. பிறகு தாய் சென்று விட்டார்.
நீண்ட நேரம் கழித்து மறுபடியும் யாஸ்மின் தாய் வந்து எழுப்பியுள்ளார். அப்பவும் யாஸ்மின் எழுந்திருக்காததால் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பயந்து போன தாய், அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்துள்ளார்.
மருத்துவர் பரிசோதனை செய்த போது, உங்கள் மகள் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, யாஸ்மிஸ் தாயார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, யாஸ்மின் கணவர் அப்துல் ரகுமான், எங்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், யாஸ்மின் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று கூறினார்.
இதற்கிடையில், யாஸ்மினின் பிரேத பரிசோதனை ஆய்வில், யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டு அதன் காரணமாகவே இறந்து இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் யாஸ்மின் கணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.
விசாரணையில் அப்துல்ரகுமான், யாஸ்மின் என் தம்பியுடன் பல மாதங்கள் கள்ளத் தொடர்பில் இருந்து வந்தாள். இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. இதனால், நான் இருவரையும் கண்டித்து வந்தேன். இதனால், எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
கடந்த நவம்பர் மாதம் இருவீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசி இந்த விவகாரம் முடிந்தது. ஆனாலும், யாஸ்மின் என் தம்பியுடன் தொடர்பில் இருந்து வந்தார். இதனால், எனக்கு ஆத்திரம் வந்தது. இதனையடுத்து, அவள் தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என்று சொல்லிவிட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்.
இதனையடுத்து, அப்துல்ரகுமானை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.