மாமனாரையும் விட்டுவைக்கல; மனைவி மீது ஆத்திரம் - கணவன் வெறிச்செயல்!
மனைவி, மாமனாரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மீது ஆத்திரம்
மதுரை, எருமாப்பட்டியைச் சேர்ந்தவர் மாயன்(55). இவரது மகள் பவித்ரா(25). சொரக்காபட்டியைச் சேர்ந்த பூவேந்தன் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கணவன் வீட்டில் இருந்து பவித்ராவை அழைத்துக் கொண்டு வந்த தந்தை மாயன், உறவினர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக தங்கியிருந்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த கணவன் மனைவி தங்கியிருந்த உறவினர் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்று
மருமகன் கொலை
மனைவி பவித்ராவையும் தடுக்க வந்த மாயனையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். உடனே, பூவேந்தருடன் வந்த அவரது நண்பர் முருகேசன் என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் தலைமறைவான பூவேந்தரை தேடி வருகின்றனர்.