மருமகளை கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்த மாமனார் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்

crime-samugam
By Nandhini Dec 01, 2021 10:16 AM GMT
Report

திருப்பத்தூர் மாவட்டத்தில், மாமனாரே மருமகளை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு முருகம்மாள் (36) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மதுனிஷா (11) மற்றும் ரோகித் (8) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். முருகம்மாள், கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 3 வருடமாக அவருடைய அப்பா வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார் முருகம்மாள். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த மாமனாரிடம், இந்த வீடு எனக்கு சொந்தம் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால், மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து, முருகம்மாள் சமையலறையில் இருக்கும் பொழுது ஆத்திரம் அடைந்த மாமனார் மணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருமகளை கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில், நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிரிழந்தார். முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது, ரத்த வெள்ளத்தில் முருகம்மாள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் வந்தனர். அப்போது, போலீசாரிடம் மணி, தான் மருமகளை வெட்டி கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.

இதனையடுத்து, மணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மருமகளை கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்த மாமனார் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம் | Crime Samugam