திருமணத்தை மீறிய உறவு.. பெண் வங்கி மேலாளர் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் செய்த காரியம் - அதிர்ச்சி!

Attempted Murder Death Viluppuram
By Vinothini Oct 22, 2023 05:34 AM GMT
Report

பெண் வங்கி மேலாளரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

புதுவை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் கூத்தப்பாக்கம் அருகே நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர், அவரது உடல் கிடந்த இடத்தில இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கார் ஒன்று கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது.

bank managers dead

அங்கு பார்த்தபொழுது காரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் தற்கொலை செய்து கொண்ட நபரிடம் இருந்த கார் சாவியை கைப்பற்றி பார்த்தபொழுது அந்த பெண் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளார்.

இவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆசைவார்த்தை கூறி 18 வயது பெண்ணை பலருக்கு விருந்தாக்கிய இளைஞர் - கொடூரம்!

ஆசைவார்த்தை கூறி 18 வயது பெண்ணை பலருக்கு விருந்தாக்கிய இளைஞர் - கொடூரம்!

கள்ள உறவு

இந்நிலையில், போலீசார் விசாரணையில் சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கோபிநாத், (37) புதிதாக துவங்கப்பட்டுள்ள மரக்காணம் தனியார் வங்கியின் கிளை மேலாளர். திருமணமாகி 2 குழந்தைகளுடன், புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி, வடகுத்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மதுரா பாண்டீஸ், (32) இவரது கணவர் பாண்டீஸ். ஒரு குழந்தை உள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை, அவ்வை நகரில் வசித்து வந்துள்ளார். மதுரா பாண்டீஸ், கடந்த 6 மாதங்களாக ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

man-killed-bank-manager-and-he-suicided-in-highway

இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தபொழுது பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் காரில் வந்துகொண்டிருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் அந்த பெண்ணின் கழுத்து அறுத்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இதனால் பயந்துபோய் கோபிநாத்தும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.