பள்ளி மாணவி கர்ப்பம் - பயத்தில் ரயில் மீது பாய்ந்து தற்கொலை!

girl suicide pregnant 12th std
By Anupriyamkumaresan Jul 22, 2021 10:30 AM GMT
Report

மகாராஷ்டிராவில் 12ம் வகுப்பில் படிக்கும் மாணவியை, ஒருவர் காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகியதால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மத்திய மும்பையில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி, படித்துக்கொண்டே பகுதிநேர வேலை மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

தந்தை இறந்துவிட்டதால், வீட்டை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரையும் காதலித்து வந்துள்ளார்.

பள்ளி மாணவி கர்ப்பம் - பயத்தில் ரயில் மீது பாய்ந்து தற்கொலை! | 12Th Std Girl Commited Suicide For Get Pregnant

அந்த வாலிபர், கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் சிறுது காலத்தில் கர்ப்பமாகியுள்ளார்.

பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அந்த பெண், கடந்த் திங்கட்கிழமை அன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.