கள்ளகாதலியுடன் நெருக்கம்.. ராணுவ வீரரை குத்திக் கொன்ற இளைஞர் - அதிர்ச்சி!
ராணுவ வீரர் ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகியதால் அவரை இளைஞர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
தூத்துக்குடி, எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரைச் சேர்ந்தவர் வேதமுத்து, இவரது மகன் வேல்முருகன் 25 வயதான இவர் ராணுவ வீரராக உள்ளார். இவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார், அவர் விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென ரத்த வெள்ளத்தில் கீழே இறங்கி வந்தார், இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர், அதற்குள் இவர் கீழே சரிந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி
இந்நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில் அதே ஊரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரான மாரிச்சாமி (29) கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. மாரிச்சாமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. அப்பொழுது ராணுவ வீரர் வேல்முருகன் விடுப்பில் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இதனையறிந்த மாரிச்சாமி அவரை கண்டித்துள்ளார், ஆனால் ராணுவ வீரர் அதனை கேட்காமல் பழகி வந்ததால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதனை காரணமாக மாரிச்சாமி அவர் வீட்டில் தூங்கும்போது சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் மாரிச்சாமியை கைது செய்தனர்.