Friday, May 9, 2025

உயரமான மலையில் ஏறி சாதனைப் படைத்த கால்கள் இல்லாத ராணுவ வீரர்

By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

குண்டுவெடிப்பில் இரண்டு கால்களையும் இழந்த ராணுவ வீரர் ஒருவர் மிக உயரமான மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.

பலரது வாழ்க்கை வரலாறுகளையும், தன்னம்பிக்கை நிகழ்வுகளையும் படிக்கும் போது நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்போம். நம்மில் பலரும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். 

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அல்லது காலத்தின் கோரதாண்டவத்தால் உடல் உறுப்பை இழந்தவர்களின் சாதனை பற்றிய கதைகள் எப்போதுமே நமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதை இணையத்தில் வைரலாகியுள்ளது. 

உயரமான மலையில் ஏறி சாதனைப் படைத்த கால்கள் இல்லாத ராணுவ வீரர் | Ex Soldier Liam King Who Last Both Legs

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாராசூட் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் பணியாற்றிய லியாம் கிங் என்ற ராணுவ வீரர் யுத்தகளத்தில் கண்ணி வெடியை மிதித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். 33 வயதான  அவர் திடீரென கால்களை பறிகொடுத்ததால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் உடலில் ஏற்பட்ட காயங்களில் மட்டுமல்ல விபத்தால் மனதில் ஏற்பட்ட காயங்களில் இருந்தும் அவர் குணமடைய அதிக நாட்கள் பிடித்தது. 

பல மாத மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு ப்ரோஸ்த்தெடிக் கால்கள் பொருத்தப்பட்டன. இந்த கால்களை கொண்டு அவரால் நடமாட, வாகனங்களை ஓட்ட முடியும் என்ற நிலை உருவானது. இதனால் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்த அவர் எதையாவது சாதிக்க வேண்டும் என லியாம் கிங் எண்ணினார்.  

ஏர்போர்ன் ஃபிட் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் இணைந்த லியாம் தனது செயற்கை கால்களுடன் அதற்கான முயற்சியில் இறங்கினார். அதன்படி லியாம் மற்றும் ஏர்போர்ன் ஃபிட்டின் நிறுவனர் லூக் ரீட் ஆகிய இருவரும் இணைந்து ஒரு சாதனை பயணத்திற்கு திட்டமிட்டனர். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் "உச்சியில் கடும் மழை மற்றும் பனி, வேகமான மற்றும் சீற்றமான காற்று ஆகியவற்றை எதிர்கொண்டு தனது செயற்கை கால்களுடன் கடல் மட்டத்திலிருந்து 3,560 அடி உயரத்தில் உள்ள வேல்ஸின் மிக உயரமான மலையை 12 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இது நான் பார்த்த மிகவும் நம்பமுடியாத சவால். லியாம் அதை முற்றிலும் அடித்தார் என அவருடன் பயணித்த லூக் கூறியுள்ளார். இதனிடையே குளிர், மழை, பனி என மலையேற்றத்தில் இருந்த அனைத்து சவால்களையும் கடந்து சாப்பிடக்கூட சரியான இடமில்லாத சரிவான மலைப்பகுதியை  லியாம் ஏறியது பாராட்டுக்களை குவித்து வருகிறது.