மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவன் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவி புகார்
பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு, அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களையும், ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பெங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறை தண்டனை
இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கணவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதில் "விவாகரத்து கோரி பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதிக்கப்படுகிறது' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.