திருமணமான டாக்டருடன்.. எழுந்த பெரும் சர்ச்சை - அழகி பட்டத்தை திருப்பி கொடுத்த மிஸ் ஜப்பான்!
மிஸ் ஜப்பான் 2024 பட்டம் வென்ற கரோலினா ஷினோ, தனது பட்டத்தை திருப்பி தருவதாக அறிவித்துள்ளார்.
மிஸ் ஜப்பான்
உக்ரைனில் பிறந்து ஜப்பானில் குடியுரிமை பெற்றவர் 26 வயதான கரோலினா ஷினோ. இவர் 2024-ம் ஆண்டுக்கான மிஸ் ஜப்பான் பட்டம் வென்றார். ஆனால் ஜப்பானிய குடிமகனாக இருந்தாலும், அவரது தோற்றம் ஐரோப்பியரைப் போல இல்லாததால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கரோலினா "ஜப்பானியராகத் தெரியவில்லை என்றாலும், ஜப்பானில் வளர்ந்ததால் தனது மனம் ஜப்பானியராகிவிட்டது.
சர்ச்சை
மிஸ் ஜப்பான் 2024 பட்டத்தை வெல்வது தனது வாழ்நாள் கனவு” என்று தெரிவித்தார். இந்நிலையில் திருமணமான மருத்துவர் ஒருவருடன் கரோலினாவுக்கு தொடர்பு இருப்பதாக மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது.
பூர்வீகமும், தனிப்பட்ட வாழ்க்கையும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து தனது அழகி பட்டத்தை திருப்பி தருவதாக கரோலினா ஷினோ அறிவித்துள்ளார்.