2000 ரூபாயிற்காக ஆடைகளை களைத்த ஆசிரியை - மனமுடைந்து மாணவி தற்கொலை!
ஆடைகளை களைந்து சோதனை செய்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பணம்
கர்நாடக மாநிலம் கடம்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கன்னட ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் பள்ளிக்கு கொண்டு வந்த ரூ.2000 பணம் காணாமல் போயுள்ளது. இந்த விவகாரத்தில் நான்கு 10-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் ஒரு 8-ம் வகுப்பு மாணவி என 5 பேர் மீது ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் முஜாவர், அறிவியல் ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் அந்த மாணவிகளை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று உடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளனர். டி.சி கொடுத்துக் கொடுத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
மாணவி தற்கொலை
மேலும், 8-ம் வகுப்பு மாணவியை அங்கிருந்த கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணத்தை எடுக்கவில்லை என சத்தியம் செய்ய வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து பள்ளியில் நடந்த குறித்து சக மாணவிகள், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியைடந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியை ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் முஜாவர் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.