நாடே உன்னால தான் நாசமா போச்சு; கனடாவின் பிரதமரை தகாத வார்த்தையில் திட்டிய நபர் - வைரல் வீடியோ!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சரமாரியாகக் கேள்வி கேட்ட நபரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாடிய நபர்
கனடாவில் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா தான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த விவகாரம் பூதாகரமானது.
இருப்பினும், இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் , அவருக்கு உள்நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பரபரப்பு வீடியோ
இந்நிலையில், தனது ஆதரவாளர்களிடம் பேசி வந்த அவரிடம் நபர் ஒருவர் சரமாரியாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது, நீ இந்த நாட்டையே முற்றிலுமாக நாசமாக்கிவிட்டாய் என கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்.
Justin Trudeau goes in for a meet and greet and tries to shake everyone’s hand when he’s told something he wasn't expecting. pic.twitter.com/cofyXntMlb
— Catch Up (@CatchUpFeed) October 5, 2023
உடனே, நான் என்ன செய்தேன் என்று ட்ரூடோ கேட்க, இப்போது இருக்கும் சூழலில் யாராவது ஒருவரால் வீடு வாங்க முடியுமா? எனக் கேட்க அதற்கு ட்ரூடோ, வீடுகள் விலையேற்றம் மத்திய அரசின் பொறுப்பு இல்லை.
அது உள்ளூர் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என பதிலளித்தார்.
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.