ரயில் விபத்து; இதயம் நொருங்கியது - கனடா பிரதமர் வேதனை!
ஒடிசா ரயில் விபத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து
ஒடிசா, பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 280 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கோர விபத்து ஏற்பட்ட இடத்திற்குமேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் விரைகிறார். தொடர்ந்து, மீட்பு பணிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
கனடா பிரதமர் வேதனை
இதற்கிடையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஓடிசா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தின் காட்சிகளை பார்த்து தன் இதயம் நெருங்கி போய் உள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழலில் கனடா நாட்டு மக்கள் இந்திய நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் கூறியுள்ளார்.