2 பெட்டியில் இருந்த யாரும் உயிர் பிழைக்கல; இறப்பு 500ஐ தாண்டலாம் - தமிழக பயணி ஷாக் தகவல்

Odisha Train Accident
By Sumathi Jun 03, 2023 05:10 AM GMT
Report

கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழக பயணி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கோர விபத்து 

ஒடிசா, பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 233 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

2 பெட்டியில் இருந்த யாரும் உயிர் பிழைக்கல; இறப்பு 500ஐ தாண்டலாம் - தமிழக பயணி ஷாக் தகவல் | Who Traveled On The Coromandel Train Video

இந்த சூழலில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த  தமிழக பயணி  கூறுகையில், 2 பெட்டிகளி நான் வெங்கடேசன் பேசுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பாலசோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணி 15 நிமிடத்திற்கு வந்தது.

ஷாக் தகவல்

பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிராசான 15 நிமிடங்களில் டெல்லியில் இருந்து தூரந்திரோ எக்ஸ்பிரஸ் எதிர் திசையில் வந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

2 பெட்டியில் இருந்த யாரும் உயிர் பிழைக்கல; இறப்பு 500ஐ தாண்டலாம் - தமிழக பயணி ஷாக் தகவல் | Who Traveled On The Coromandel Train Video

அது பக்கத்தில் ஒரு கூட்ஸ் வண்டியும் வந்தது. இரண்டு ரயிலுக்கு நடுப்புறம் கூட்ஸ் வண்டி புகுந்ததால், இந்த இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கின. கிட்டத்தட்ட இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏராமானனோரை மீட்கும் பணி நடந்து வருகிறது. நான் பி 7 இல் இருந்தேன். பி 6 வரை அனைத்து பெட்டிகளும் முழுமையாக விபத்தில் சிக்கியது. இரண்டு பொதுப்பெட்டியில் இருந்த அனைவருமே இறந்துடாங்க.. யாருமே தப்பிக்கல. நான் உடனே எங்க டீம் (ராணுவத்திற்கு)க்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அவர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் மீட்பு பணியில் இறங்கினர். இந்த பணி விடிய விடிய நடக்கும். நிலைமை சரியாக இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.