நாட்டை உலுக்கிய கோர விபத்து - தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து!

Tamil nadu Odisha Train Accident
By Sumathi Jun 03, 2023 03:50 AM GMT
Report

தமிழகத்தில் இருந்து செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோர விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது கோரமண்டல் எக்ஸ்பிரஸ். ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.

நாட்டை உலுக்கிய கோர விபத்து - தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து! | Trains Cancelled Tamil Nadu Odisha Train Accident

இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது.

ரயில்கள் ரத்து

அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் 288 பேர் பலியாகியுள்ளனர். 2000த்திற்கும் மேலோர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு படையினர் தீவிரமான பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழிதடத்தில் செல்லும் பல ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்திலிருந்து சென்னை - ஷாலிமார் ரயில் (12842), கன்னியாகுமரி - ஹவுரா (ரயில் எண் : 1266) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாளை (04/06/2023) திருப்பதியிலிருந்து ஹவுரா செல்லும் ரயிலும் (எண் : 20890) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், பாலசோர் வழித்தடத்தில் செல்லும் 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.