நிக்காம ஓடு..டிரெட்மிலில் ஓட வைத்தே 6 வயது மகனை கொன்ற தந்தை - பதறவைக்கும் வீடியோ!
உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி தனது 6 வயது மகனை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
6 வயது மகன்
அமெரிக்கா மாகாணம் நியூ ஜெர்ஸி பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கு பிரெ மிக்கோலியோ என்ற பெண்ணுடன் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்தார். இந்த வகையில் தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக நினைத்து கொண்ட அவர் தினந்தோறும் அச்சிறுவனை உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு கூடவே அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார். சிறுவன் ஓட தொடங்கியதும் கிரெகர் டிரெட்மில்லின் வேகத்தை தொடர்ந்து அதிக படுத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார்.
அதை பார்த்ததும் ஆத்திரமடைந்த கிரெகர் தனது மகன் கோரெவை வலுக்கட்டாயமாக தூக்கி மீண்டும் டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார். இவ்வாறு கட்டாயப்படுத்தியதில் அச்சிறுவனும் வலுவிழந்து ஓட முடியாமல் ஓடியுள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்தார்.
கொன்ற தந்தை
இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் போலீசார் கிரெகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நீதிமன்ற விசாரணையில், சிறுவன் உயிரிழக்கும் முன்பு உடற்பயிற்சி கூடத்தில் என்ன நடந்தது என்பதை பற்றிய வீடியோ காட்சிகள் வந்தது.
அதில், கிரெகர் தனது மகன் கோரெவை உடற்பயிற்சி கூடத்திற்குள் அழைத்து வருவது டிரெட்மில்லில் ஓட செய்தது வேகத்தை கூட்டியது, ஆதலால் நிலை தடுமாறி கீழே விழுந்தது என பதைபதைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோவை பார்த்த தாய் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் நின்றார்.
நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கிரெகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.