Tuesday, Apr 29, 2025

விடாமல் தந்தை செய்த காரியம் - ஆத்திரத்தில் மகள் வெறிச்செயல் - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Crime Kanyakumari Death
By Jiyath a year ago
Report

தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்தாய் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தை உயிரிழப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள்கள் உள்ளனர். சுரேஷ்குமாரின் மது குடிக்கும் பழக்கத்தால் தகராறு ஏற்பட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

விடாமல் தந்தை செய்த காரியம் - ஆத்திரத்தில் மகள் வெறிச்செயல் - அதிர்ச்சி சம்பவம்! | Daughter Killed Father In Kanyakumari

அவருடன் இளைய மகளையும் அழைத்துச் சென்றுள்ளார். மூத்த மகள் ஆர்த்தி (21) சுரேஷ்குமாருடன் இருந்தார். இந்நிலையில் சுரேஷ்குமார் வீட்டில் அதிகமாக மதுகுடித்து விட்டு இறந்து கிடப்பதாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

கள்ளக்காதலை கைவிட மறுப்பு - மகள் என்றும் பாராமல் தந்தையே செய்த கொடூர காரியம்!

கள்ளக்காதலை கைவிட மறுப்பு - மகள் என்றும் பாராமல் தந்தையே செய்த கொடூர காரியம்!

நாடகமாடிய மகள் 

பிரேத பரிசோதனையில் சுரேஷ்குமாரின் தலையில் காயம் மற்றும் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது குறித்து தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் அவரின் மகள் ஆர்த்தியை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

விடாமல் தந்தை செய்த காரியம் - ஆத்திரத்தில் மகள் வெறிச்செயல் - அதிர்ச்சி சம்பவம்! | Daughter Killed Father In Kanyakumari

அப்போது தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஆர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தனது தந்தை மதுகுடித்து விட்டால் தகாத வார்த்தைகளை பேசுவார். சம்பவத்தன்று அதே போல் என்னிடம் பேசியதோடு தாக்க முயன்றார். இதனால் அவரை தள்ளிவிட்டு கட்டை எடுத்து தலையில் தாக்கினேன்.

தொடர்ந்து அவர் திட்டியதால் பேச விடாமல் கழுத்தை நெரித்தேன். இதில் மயங்கி விழுந்து விட்டார். பின்னர் அவர் இறந்தது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்க மதுகுடித்து இறந்து விட்டதாக புகார் அளித்தேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஆர்த்தியை கைது செய்தனர்.