கள்ளக்காதலுடன் வீட்டில் தூங்கிய மனைவி - பார்த்த கணவன் ஆத்திரத்தில் வெறிச்செயல்!
மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கணவன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
கன்னியாகுமரி, மேடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (34). மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி ஜெனிபா ஆல்பர்ட்(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெனிபாவிற்கு கோழிக்கடையில் வேலை பார்க்கும் ஆஷிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த சமீர் கேட்கையில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் மனைவி ஜெனிபா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், ஆஷிக் அங்கு சென்று வந்து கள்ளக் காதலை வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த சமீர் திடீரென மனைவியையும், குழந்தைகளையும் காண அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆஷிக் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
அருகே ஜெனிபாவும் இருந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சமீர், ஆஷிக்கை கட்டை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி ஜெனிபா ருவரும் சேர்ந்து திட்டம் போட்டு, ஆஷிக்கை தூக்கி நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் ஆஷிக்கை கவனித்த சிலர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில்,
கள்ளக்காதல் விவகாரத்தில் ஆஷிக் கொல்லப்பட்டதும், இதில் கணவர் சமீருக்கு ஜெனிபா உதவி செய்ததும் அம்பலமானது. அதன்பின், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.