நண்பரின் திருமணம்; கிஃப்ட் கொடுத்த இளைஞர் மேடையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?

Andhra Pradesh Marriage Death
By Sumathi Nov 22, 2024 02:00 PM GMT
Report

திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற அமேசான் ஊழியர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் திருமணம்

ஆந்திரா, பெனுமடா கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி (28). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது நண்பரின் திருமணம் பெனுமடா கிராமத்தில் நடந்துள்ளது.

திருமண நிகழ்வு

அந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் வம்சி நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். பின், மணமக்களுக்கு பரிசு அளிப்பதற்காக, மணமேடைக்கு சென்றுள்ளார்.

திருமணத்தில் ஜாலியாக நடனமாடிய நபர்; திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ

திருமணத்தில் ஜாலியாக நடனமாடிய நபர்; திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ

மேடையில் நபர் பலி

தொடர்ந்து பரிசை அளித்துவிட்டு நண்பர்கள் அனைவரும் டான்ஸ் ஆடியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அப்போது, வம்சி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

நண்பரின் திருமணம்; கிஃப்ட் கொடுத்த இளைஞர் மேடையில் உயிரிழப்பு - என்ன நடந்தது? | Man Dies Cardiac Arrest At Friends Wedding

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மணமக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.