ஸ்டாண்ட் அப் காமெடியனின் பேச்சு - மேடையில் ஏறி முகத்தில் குத்து விட்ட நபர் - எதற்காக தெரியுமா?
ஸ்டாண்ட் அப் காமெடியனின் முகத்தில் இசைக்கலைஞர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாண்ட் அப் காமெடி
ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜேமி கரவாகா என்பவர் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களை பேசி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார்.
மேலும், ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.
மன்னிப்பு
இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ விறுவிறுவென மேடைக்கு சென்று ஜேமியின் முகத்தில் ஒரு குத்து விட்டார். இந்த குத்தில் காமெடியன் ஜேமி நிலைகுலைந்து போனார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள காமெடியன் ஜேமி, தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரின் மன்னிப்பை ஆல்பர்டோ ஏற்றுக்கொண்டுள்ளார்.