திருமணத்தில் ஜாலியாக நடனமாடிய நபர்; திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ

Marriage Chhattisgarh Death
By Sumathi May 12, 2023 05:41 AM GMT
Report

திருமண மேடையில் நடனமாடி கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணத்தில் நடனம்

சத்தீஸ்கர், பாலோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் ராஜ்குமார்(52). உருக்காலையில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் ஜாலியாக நடனமாடிய நபர்; திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ | Man Dies Heart Attack Dancing At Wedding Chatisgar

அதற்காக திலீப் அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து உறவினர்களுடன் ஜாலியாக நடனமடி பொழுதைக் கழித்துள்ளார். அப்போது, ஜோடியுடன் மேடையில் குதித்து ஆடினார்.

உயிரிழப்பு

அதில், மேடையில் அப்படியே சில நொடிகள் அமர்ந்தார். தொடர்ந்து, சரிந்து விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

[

பரிசோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.