திருமண மேடையில் நடனம் - திடீரென மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு!
திருமண மேடையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சி
மத்திய பிரதேசம், சியோனி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அதில் 4,5 பெண்கள் தரையில் நடனமாடியுள்ளனர். நடனமாடிக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
பெண் மரணம்
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Woman dies of heart atatck while dancing in Seoni district of Madhya Pradesh. pic.twitter.com/gO6D0o1gNg
— Nakshab (@your_nakshab) December 15, 2022
பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் சமீபகமா அதிகமாக அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.