சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி; தகாத உறவை கண்டித்த தாத்தா - பேரன் வெறிச்செயல்!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவில் பூச்சிமருந்து
நாமக்கல், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி. பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும், அதனை ம்பி ஆதி (18) மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) என்பவருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். மீதம் உள்ள சாப்பாட்டை தனது அம்மாவிடம் கொடுத்துள்ளார்.
அப்போர் அவர் அதனை சாப்பிட்டதில் வித்தியாசமான வாசனையை உணர்ந்ததால் தந்தைக்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால், சண்முகநாதன் ஏற்கெனவே அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பேரன் கொடூரச்செயல்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த சிக்கன் ரைஸை தடயவியல் சோதனைக்கு அனுப்பியதில், அந்த சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. உடனே, பகவதி புகார் அளித்த நிலையில், ஹோட்டல் சீல் வைக்கப்பட்டது.
ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய் மற்றும் தாத்தா தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், பகவதியிடம் விசாரணை நடத்தியதில், தாத்தா பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.