ஆசையாக பிரியாணி சாப்பிட்ட சிறுவன், கடித்தது சிக்கன் இல்ல பூரான் - அட்மிட் ஆன சோகம்!
கடலூரில் தனது பிள்ளைகளுக்கு ஆசையாக பிரியாணி வாங்கி தந்ததால் நேர்ந்த விபரீதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி
கடலூரில், செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஒரு கட்டுமான ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
குழந்தைகள் மூன்று பேரும் தங்கள் தந்தையிடம் ஆசையாக பிரியாணி கேட்டதையடுத்து, ராஜா தனது 3 குழந்தைகளுக்கும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார்.
விபரீதம்
இந்நிலையில், அந்த பிரியாணியை தனது குழந்தைகளுக்கு அவரே ஆசையாய் ஊட்டிய போது பிரயாணியில் பூரான் கிடந்துள்ளது. அதில் பாதிப் பூரானை அவரது குழந்தை அஜய் கிருஷ்ணா விழுங்கிவிட்டார்.
மீதியை தட்டில் துப்பியதும், அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக அந்த பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போதும் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.