சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவர் பலி - அதிர்ச்சி சம்பவம்!

Chennai Death
By Sumathi Nov 15, 2022 04:42 AM GMT
Report

மது விருந்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் ரைஸ் 

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சீதாபதி. இவரது மகன் மகா விஷ்ணு(21). இவர தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து வந்தார். இந்நிலையில், நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு, மகா விஷ்ணு ரெட்டேரி நூறடி சாலைக்கு சென்றுள்ளார்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவர் பலி - அதிர்ச்சி சம்பவம்! | College Student Dies Eating Chicken Fried Rice

பின்னர் அங்கிருந்து கிராண்ட் மதுபான கூடத்தில் நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்துக் கொண்டுள்ளார். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு போதையில் தூங்கியுள்ளார். இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த மகாவிஷ்ணு நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்துள்ளார்.

மாணவன் பலி

அப்போது அவரது நண்பர்கள் அவரை எழுப்பிய போது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கெட்டுப்போன கறியால் சமைத்த சிக்கன் ரைஸை சாப்பிட்டதால் மாணவன் இறந்தாரா அல்லது வேறேதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.