திருமண நிச்சயம் முடிந்ததும் பெண் சொன்ன தகவல் - மனமுடைந்து இளைஞர் தற்கொலை!
நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் மாலத்தீவில் என்ஜினியராக பணியில் இருந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
இதனையடுத்து திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் மாலத்தீவில் பணியில் இருக்கும் ராஜேஷை தொடர்பு கொண்ட புவனேஸ்வரி 'நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வந்தேன். அவர் தனக்கு தொல்லை கொடுக்கிறார்.
தற்கொலை
எனவே நான் இல்லை என்றாலும் நீங்கள் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது ராஜேஷிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து புவனேஸ்வரி வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருவதால், மனமுடைந்து போன ராஜேஷ் கடந்த 15-ம் தேதி மாலத்தீவில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு, மேல்மலையனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.