அந்த விஷயத்தில் மாலத்தீவில் முதலிடம் பிடித்த இந்தியர்கள் - அதுவும் லட்சக்கணக்கில்!
2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்
மாலத்தீவு
பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சென்றிருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் மாலத்தீவை புறக்கணிப்போம் என்று இந்தியர்களும், இந்திய பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியர்கள் முதலிடம்
இந்நிலையில் மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் படி 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 939 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவு சென்றுள்ளனர். அதில், 2 லட்சத்து 9,198 இந்தியர்கள் மாலத்தீவு வந்துள்ளனர். மேலும் அடுத்த இரண்டு இடங்களில், ரஷ்யா (2,09,146), சீனா (1,87,118) ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.