மணப்பெண்ணை காதலித்த இளைஞர் - கல்யாண ஊர்வலத்தில் செய்த பகீர் செயல்!
மணமகன் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருதலை காதல்
உத்தரபிரதேசம், துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில், மணமகன் சுதாமா கவுதம்(24) குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அங்கு பைக்கில் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்த சச்சின் பிண்ட் (23) என்ற இளைஞர் சுதாமா கவுதம் மீது திராவகத்தை ஊற்றியுள்ளார். அதில், அவரும் அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
இளைஞர் வெறிச்செயல்
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரில் போலீஸார் 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில், சச்சின் பிண்ட் மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்ததும், எனவே திருமணத்தை நிறுத்தும் நோக்கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமகன் மீது திராவகம் வீசியதும் தெரியவந்தது.