காதலை ஏற்க மறுத்த தோழி - 24 கோடி நஷ்டஈடு கேட்ட இளைஞன்!
தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததாக கூறி, இளைஞர் 24 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
ஒருதலை காதல்
சிங்கப்பூர் ட்ரோன் நிறுவனமான டி1 ரேசிங்கின் இயக்குனராக பணிபுரிபவர் கவுஷிகன். இவருக்கு நோரா டான் என்ற பெண் கிளப்பில் பழக்கமாகி நட்பாக பழகி வந்திருக்கின்றனர். தொடர்ந்து தனது காதலை கவுஷிகன் நோராவிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் நோரா கவுஷிகனை காதலனாக பார்க்கவில்லை, நட்பாகதான் பார்த்ததாக மறுத்துள்ளார். மேலும் அவருடனான தொடர்புகளையும் துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கவுஷிகன் பலமுறை தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
நஷ்டஈடு
கடைசியில் இருவரும் மருத்துவ ஆலோசனை பெறுவதாக முடிவு செய்து ஒன்றரை ஆண்டு சென்றுள்ளனர். அதிலும், கவுஷிகனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால், நோரா மருத்துவ ஆலோசனையையும் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், வுஷிகன் நீதிமன்றத்தை நாடி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "என் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காமல், என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி, என் தொழில் வாழ்க்கையையும் சீர்குலைத்திருக்கிறார் நோரா.
எனவே, அதற்கு இழப்பீடாக நோராவிடமிருந்து 3 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் 24 கோடி ரூபாய்) நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.