ஒருதலை காதல் தகராறு - ஆசிரியையின் மூக்கை உடைத்த மாணவன்!
காதல் தகராறில் ஆசிரியையின் மூக்கை மாணவன் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
அமெரிக்கா, லூசியாணா மாகாணத்தில், செயிண்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் ஒரே மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளனர்.
இதில் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் அவர்கலின் பெற்றோரை ஏர்கனவே அழைத்து இது குறித்து கூறி கண்டித்துள்ளனர். மேலும், இவ்வாறு நடந்துக் கொண்டால் பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.
மாணவர்கள் சண்டை
இந்நிலையில், இரு மாணவர்களில் ஒருவர் அந்த மாணவிக்கு தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்து உள்ளார். அதற்காக ஒரு பரிசையும் வாங்கி பள்ளிக்கு வந்துள்ளார். இதை அறிந்துக் கொண்ட மற்றொரு மாணவன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மாணவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்த கணித ஆசிரியை அமெண்டா இருவரையும் சண்டையிலிருந்து விலக்க முயன்றுள்ளார்.
ஆசிரியை காயம்
இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவன் ஆசிரியை அமெண்டாவின் மூக்கில் குத்தினான். இதில் ஆசிரியையின் மூக்கு உடைந்து ரத்தம் வந்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த இரு மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.