காதலன் வீட்டில் தகராறு…போலீசின் சட்டையை கிழித்து, கையை கடித்த காதலி
சென்னை அருகே காதலன் வீட்டில் தகராறு செய்த காதலியிடம் சமாதானம் செய்த காவலரின் சட்டையை கிழித்து கையை கடித்த காதலியை போலீசார் கைது செய்தனர்.
தொடர் தொந்தரவு
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு வாரத்திலேயே செல்வி தனது காதலன் ரேவேந்திர குமாரிடம் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரேவேந்திர குமார் வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
போலீசார் மீது தாக்குதல்
நேற்றும் இதே போல் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரேவேந்திர குமார் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வி காவலரின் சட்டையை கிழித்து, அவரின் கையை கடித்து தாக்கினார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு செல்வியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.