கணக்கு கேட்ட ஓனர் பெண்.. உதைத்து கண்மூடித்தனமாக தாக்கிய நபர் - ஊழியரின் வெறிச்செயல்!
பெண் ஒருவரை ஊழியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் விடுதி
சென்னை, முகலிவாக்கம் கிருஷ்ணவேணி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கணபதி ஜானகி அந்த பகுதியில் பிங்க் மகளிர் விடுதி ஒன்றை கடந்த 2013ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இங்கு 400க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.
மேலும், கொரோனா காலகட்டத்தில் தொழில் நஷ்டம் ஏற்பட்டு கடனாகியுள்ளது. அப்பொழுது தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவம் என்பவர் அறிமுகமானார், அவரிடம் விடுதியை கனவித்துக்கொள்ளுமாறு பொறுப்பை ஒப்படைத்தார். இவரை நம்பி ஜானகி கணக்கு வழக்குகளை பரமசிவமிடம் ஒப்படைத்தனர்.
இதய நோயால் இறந்த 3 மாத குழந்தை.. காதல் மனைவி செய்த காரியம், சோகத்தில் கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சி!
தாக்குதல்
இந்நிலையில், சில நாட்களாக கணக்குவழக்குகளில் தவறு நடப்பதாக அறிந்துகொண்ட ஜானகி அவரிடம் நேரில் சென்று விசாரித்தார், அப்பொழுது பரமசிவம் என்னிடமே கணக்கு கேட்கிறாயா? என்று ஆத்திரமடைந்து இனி விடுதியை நான் தான் நடத்தப்போகிறேன், என்று கூறி அவரை மிரட்டி தாக்க தொடங்கினார்.
பின்னர், ஜானகியை அடித்து அவரது கழுத்தை நெரித்தும், உதைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து மாங்காடு அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணபதி ஜானகி புகாரளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.