மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபர் - வைரலாகும் வீடியோ காட்சிகள்
மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மெட்ரோ
பெங்களூரு மெட்ரோவை அங்குள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
அதில் ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பயணியிடம் பிச்சை எடுக்கிறார். பின், அடுத்த பயணியிடமும் பிச்சை கேட்கிறார். இதனை பயணிகலில் ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.
விதிமீறல்
அது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெங்களுரு மெட்ரோ நிர்வாகம், இது சனிக்கிழமை நடந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் சரியான தேதி மற்றும் நேரத்தைக் கண்டறிய விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
இந்த நபர் எங்கு ஏறினார் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தொப்பி அணிந்திருந்தாரா என்பது கூட எங்களுக்குத் தெரியாது என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோவில் பிச்சை எடுப்பது இது இரண்டாவது சம்பவம் என தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயிலில் பிச்சையெடுப்பது விதிமீறல் என்பது குறிப்பிடத்தக்கது.