சிலிர்க்க வைத்த ஃபிளமிங்கோ பறவைகள் கூட்டம்? தீயாய் பரவும் வீடியோ!
ஃபிளமிங்கோ பறவைகள் கூட்டமாக செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபிளமிங்கோ
ஃபிளமிங்கோ வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இது செங்கல் நாரை வகை பறவை ஆகும்.
இந்த பறவைகள் நேவி மும்பையில் கூட்டமாக செல்வதாக கூறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்ததில்,
FACT CHECK
இதே ஃபிளமிங்கோ கூட்டம் தொடர்பான புகைப்படம் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில் கிடைத்துள்ளது. அது பகிரப்பட்ட தேதி டிசம்பர் 8, 2023. இந்த வீடியோ கஸகஸ்தான் நாட்டின் மங்கிஸ்டாவு பகுதியில் எடுக்கப்பட்டது.
குளிர்காலங்களில் வெதுவெதுப்பான வெப்பநிலையை தேடி ஃபிளமிங்கோ பறவையில் இடம்பெயறும். அதன்படி, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் குளிர்காலத்தின் போது மும்பைக்கு ஃபிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன.
ஆனால் 2024ஆம் ஆண்டு அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.